பொங்கல் திருவிழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற 14.01.2021(வியாழக்கிழமை) அன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று 11.01.2021 (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணி அலுவலக பெண் கண்காணிப்பாளர்கள் அந்தோணியம்மாள், காவேரி, சரஸ்வதி உள்ளிட்ட பெண் உதவியாளர்கள், பெண் இளநிலை நிலை உதவியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் கட்டிகள் வைத்து 3 பானைகள் ஏற்றி வெண் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கலிட்டனர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா மற்றும் சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து. மயில்குமார், கணேசபெருமாள், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், ராபர்ட் உள்ளிட்ட உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.