• vilasalnews@gmail.com

கோரிக்கை வைத்த பொதுமக்கள் - கைவிரித்த கனிமொழி எம்பி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்திற்குட்பட்ட கே.குப்பனாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில்  நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில்,  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது அவர் பேசுகையில், மக்கள் களம் நிகழ்ச்சி வழியாக, ஒவ்வொரு பகுதிக்கும் வந்து அவர்களுடைய கோரிக்கைகள் என்ன என்று கேட்டுக்கொண்டு அந்த கோரிக்கைகளை மனுவாக பெற்று அதன் மீது எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத்தான் இந்த மக்கள் களம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தற்போது இந்த மேடைக்கு வந்த உடனேயே, இந்த பகுதியில் நாங்கள் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு எம்பி நிதி எல்லாம் கொடுத்து முடித்து விட்டோம். ஆகவே, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கினால், உங்களுக்கான சமுதாய நலக்கூடத்தை அமைக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என கனிமொழி எம்பி தெரிவித்தார். இந்த பதிலானது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.


நீங்கள் தான் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய மக்கள் களம் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். பின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால் எம்பி நிதி காலி, அடுத்து எம்பியாக்குங்கள் செய்கிறோம் என்கிறீர்கள். நாங்கள் சமுதாய நலக்கூடம் தான் கேட்கிறோமே தவிர, அவை எம்பி நிதியில் தான் அமைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமிழக அரசு சார்பில் ஏதேனும் ஒரு வகையில் நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி கட்டித்தரலாமே? தாங்கள் தமிழகத்தில் ஆளும் திமுக வை சேர்ந்தவர், தமிழக முதல்வரின் உடன் பிறந்த சகோதரி என்ற எண்ணத்தில் தானே உங்களை நம்பி நாங்கள் மனு கொடுக்கிறோம். அப்படியிருக்க, எம்பி நிதி காலியாகிவிட்டது. அடுத்து எம்பி ஆக்குங்கள் செய்து தருகிறேன் என்று சொல்வது பொறுப்பான பதிலா ? இது விந்தையாக உள்ளது. தேந்தெடுத்தால் செய்கிறேன் என்றால் அதற்கு பெயர் தேர்தல் பரப்புரைத்தானே? இதை சொல்வதற்கு எதற்கு நீங்கள் மக்கள் களம் என்ற நிகழ்ச்சி நடத்த வேண்டும்? என கனிமொழி எம்பியை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் கைது!

இரவில் நேரில் விசிட் அடித்த கனிமொழி - காணாமல் போன கழிவுநீர் பிரச்சனை!

  • Share on