• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கால்நடை பெண் மருத்துவருக்கு உயர் அதிகாரி பாலியல் தொல்லை!

  • Share on

தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் மீது, கால்நடை உதவி பெண் மருத்துவர் ஒருவர் கொடுக்கப்பட்ட பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வ செயல்புரத்தில் பணிபுரியும் கால்நடை உதவி பெண் மருத்துவர், தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மாவட்ட ஆட்சியர், மருத்துவதுறை உயர் அதிகாரிகள், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்ததோடு, தனது சக மருத்துவர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவிலும் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், என்னை பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்புவதாக, பாலியல் புகார் கொடுத்த பெண் மீது பதிலுக்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அந்த கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி புகார் கொடுக்க, இரு தரப்பினரும் தெற்கு காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரனை நடைபெற்றது. இந்த நிலையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணிற்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட சக மருத்துவர்கள், பணியாளர்கள் தெற்கு காவல் நிலையில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புகாருக்கு ஆளான கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி தனது செல்வாக்காளும், பண பலத்தாலும் தன் மீதான புகாரை மறைத்து தப்பிக்க முயல்வதாகவும், பெண் அமைச்சரும், பெண் எம்பியும் அடங்கிய தூத்துக்குடியிலேயே ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் நிகழ்வு வேதனை தருவதாக சொல்லப்படுகிறது.

பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்குமா? அநீதி இழைக்கப்படுமா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

  • Share on

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்!

தூத்துக்குடியில் வாழை இலைக்கட்டு தட்டுப்பாடு : விலை கடும் உயர்வு!

  • Share on