• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்!

  • Share on

தூத்துக்குடி அருகே சங்கரபேரியில் லாரி செட் உரிமையாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் ஜெகவீர பாண்டியன் மகன் சக்திவேல் (52), லாரி செட் உரிமையாளர். இவர் இன்று மாலை 6 மணி அளவில் தனது லாரி செட் முன்பு ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்கள் இவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 


பின்னர் அந்த கும்பல்கள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ  இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சங்கரப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த ஜனவரி மாதம் தனது மாமியார் வீட்டில் இருந்தபோது சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 


கருப்பசாமி மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்ளது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சக்திவேல் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இது சம்பந்தமாக சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Share on

தூத்துக்குடியில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

தூத்துக்குடியில் கால்நடை பெண் மருத்துவருக்கு உயர் அதிகாரி பாலியல் தொல்லை!

  • Share on