தூத்துக்குடி, உடன்குடியில் கடைகளில் பணியாற்றிய 3 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமையில், துணை இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சைல்டுலைன், தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் உடன்குடி பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை செய்தனர்.
அப்போது தூத்துக்குடியில் 18 வயது பூர்த்தியாகாத 2 குழந்தை தொழிலாளிகளையும், உடன்குடியில் குழந்தை தொழிலாளியும் மீட்கப்பட்டனர். அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 3 பேரையும், அவர்கள் ஏற்கனவே இடையில் நின்ற பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்ந்து கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.