தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர் வாரிசுதாரர்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) அரசு பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 20 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (11.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
மேற்படி பணியாணையை தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவலர் மாரியப்பன் மனைவி சுஜாதா, சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யம்பிள்ளை மகன் சுந்தரபாண்டியன், காவலர் இராஜசேகரன் மனைவி கல்யாணி, காவலர் ஆண்டி மகன் அலெக்சாண்டர், தலைமைக் காவலர் செல்வம் மகன் விக்ணேஷ், தலைமைக் காவலர் ஜெயசீலன் மகன் வால்டர் ராய்சன்;, காவலர் ஜான் போஸ்கோ மகன் ஸ்டீபன் ராஜ், தலைமைக் காவலர் மாரிமுத்து மகள் ரத்னாதேவி, முதல் நிலைக் காவலர் சங்கரநாராயணன் மனைவி அமுதா, தலைமைக் காவலர் சுடலைமணி மகன் ராஜேஷ், தலைமைக் காவலர் சுந்தர பாண்டியன் மகள் சிவகாமி செல்வி, உதவி ஆய்வாளர் சுப்பையா மகள் ரோகினி, தலைமைக் காவலர் பொன்இசக்கி மகன் முருகேஷ், முதல்நிலைக் காவலர் இராமலிங்கம் மனைவி சண்முகசுந்தரி, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மனைவி திவ்யா, தலைமைக் காவலர் அருணாச்சலம் மகள் விக்ணேஷ்வரி, காவலர் ராஜ்குமார் மனைவி ஆனந்தம்மாள், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மகன் ராதாகிருஷ்ணன், காவலர் ஜான் ஆல்வின் டேவிட் மனைவி செல்வி ஜெயரூபி மற்றும் பணியிலிருக்கும் போது மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மகள் ரூபாதேவி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மாவட்ட காவல்துறை அலவலக நிர்வாக அலுவலர் சுப்பையா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து அலுவலக கண்காணிப்பாளர் மயில்குமார், கணேச பெருமாள் மற்றும் உதவியாளர் கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.