• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே கடத்த இருந்த 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

  • Share on

ஓட்டப்பிடாரம் இந்திரா நகரில் கடத்தப்பட இருந்த 640 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் இந்திரா நகரில் சென்று பார்த்தபோது அங்கு ரேஷன் அரிசி கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது. மேலும் ரேஷன் அரிசியை கடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை கைப்பற்றி தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்புக் கழகத்திடம் ஒப்படைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் நிலை தடுமாறி விழுந்த பெயின்டர் பரிதாபமாக பலி!

ஆத்தூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

  • Share on