தூத்துக்குடியில் மொட்டை மாடியில் நிலை தடுமாறி விழுந்த பெயின்டர் இறந்தது குறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 50 ) பெயின்டரான இவர் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் தங்கி ஒரு வீட்டில் பெயின்ட்டிங் பணிகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்து வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தார். நேற்று காலை எழுந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்.