பசுவந்தனை கைலாசநாதர் சுவாமி, ஆனந்தவல்லி அம்மாள் கோயில் ஏக தின லட்சார்ச்சனை விழா 13ஆம் தேதி நடக்கிறது.
திருவாதிரை நட்சத்திரமும் சித்திரயோகமும் கூடிய ஆடி மாதம் 28ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு மேல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை விழாவும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. இதில் பசுவந்தனை சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொள்கிறார்கள். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி செய்து வருகிறார்கள்.
லட்சார்ச்சனை என்றால் என்ன?
கடவுளின் திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்வது அஷ்டோத்திரம். ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாமம். சகஸ்ர நாமத்தை நுாறுமுறை சொன்னால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘லட்சார்ச்சனை’ எனப்படும். லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் உலகத்திற்கே நன்மை உண்டாகும். கோயில்களில் வருஷத்துக்கு ஓரிருமுறை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.