• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக களக்காட்டுக்கு மீண்டும் அரசு பேருந்து இயக்க கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக களக்காட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆட்சியில் தூத்துக்குடியில் இருந்து களக்காட்டுக்கு முக்காணி, ஏரல், குரும்பூர், நாசரேத், பேய்குளம், நாங்குநேரி வழியாக அரசு பேருந்து ( தடம் எண் டி 142 ) இயக்கப்பட்டு வந்தது. நல்ல வசூலுடன் இயங்கிய இந்த அரசு பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லை எனக் கூறி அதிகாரிகள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடியில் இருந்து களக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி அளவீடுகளில் கூடுதல் மதிப்பீடா... முறையீடு செய்து தீர்வு காணலாம்!

பசுவந்தனை சிவன் கோயிலில் வரும் 13ம் தேதி லட்சார்ச்சனை

  • Share on