தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் இன்று (09.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீனவர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் லோகேஸ்வரன் (21), தூத்துக்குடி வண்ணார் தெருவை சேர்ந்த கலைமணி மகன் உதயகுமார் (24), தூத்துக்குடி கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த பிரந்த்ரா ஷா மகன் விகாஷா (25) மற்றும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் லோகேஸ்வரன், உதயகுமார், விகாஷா மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட லோகேஸ்வரன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகளும், உதயகுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.