• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாரி டிரைவர் அடித்துக் கொலை : 4 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் லாரி டிரைவரை அடித்துக் கொலை செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சங்கரப்பேரியில், ஜோதி நகர் ரோட்டில் ரத்தக் காயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு டிஎம்பி காலனியைச் சேர்ந்த மகராஜன் மகன் ராஜேஸ் கண்ணன் (33) என்பது தெரியவந்தது. 

இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஜோதி நகரில் லாரியில் இருந்து இரும்பு கம்பிகளை இறக்கச் சென்றுள்ளார். அவருடன் லோடுமேன்கள் 5பேர் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 5பேரும் சேர்ந்து ராஜேஸ் கண்ணனை சராமாரியாக கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக தூத்துக்குடி சக்திவிநாயகர் புரத்தைச் சேர்ந்த ஆழ்வார்சாமி மகன் சின்னத்துரை (46), அருப்புக்கோட்டை காந்தி நகர் ஐயம்பெருமாள் மகன் தங்கம் (33), ஆழ்வார்கற்குளம் கல்யான சுந்தரம் மகன் அஜித்குமார் (29), கழுநீர்குளம் வடிவேல் மகன் பூஇசக்கிமுதது (25) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கீழதட்டபாறையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரை தேடி வருகின்றனர்.  இதுகுறித்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு : போக்சோவில் கைதானார் வாலிபர்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி : 6 பேர் கைது

  • Share on