கோவில்பட்டி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். விசாரணையில், மாணவியை கோவில்பட்டி அருகே குமாரகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலகிருஷ்ணன் (24) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அங்கு சென்று பாலகிருஷ்ணனை பிடித்து, மாணவியை மீட்டனர். மேலும் அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பத்மாவதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பாலகிருஷ்ணனை கைது செய்தார். பின்னர் அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.