விளாத்திகுளத்தில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் முதலியார் தெரு அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், ராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், செல்வகுமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட விழா கமிட்டியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.