ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் மக்களவை செயலகம் வழங்கியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
கடும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி வழங்கப்பட்டு இருப்பதை இந்தியா முழுவதும் காங்கிரஸார் வரவேற்று கொண்டாடி வரும் வேளையில்,
அதன் தொடர்ச்சியாக, இன்று, தூத்துக்குடியிலும், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸார் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மாவட்ட செயலாளர்கள் கோபால், காமாட்சி தனபால், ரூபன் வேதசிங், ஜான்சன், மாவட்டத் துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாசலம், தனபால் ராஜ், ரஞ்சிதம் எஸ் ஜெபராஜ், சின்னகாளை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் வெங்கடசுப்பிரமணியன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் எஸ்.ஜெயராஜ், வார்டு தலைவர்கள் தனுஷ், மாரிமுத்து, ஜெபா, செல்வவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.