• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே காப்பர் வயர்களை திருடியவர் கைது

  • Share on

தூத்துக்குடி அருகே காப்பர் வயர்களை திருடியவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 16,500 மதிப்புள்ள காப்பர் வயர்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியிலுள்ள தனியார் டைட்டானியம் நிறுவனத்தில் நேற்று (06.08.2023) காப்பர் வயர்கள் திருடு போயுள்ளது.

இதுகுறித்து மேற்படி தனியார் டைட்டானியம் நிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வேல் மகன் ஆத்திமுத்து (52) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கும் புதுக்கோட்டை கீழதட்டப்பாறை, தெற்கு காலனியை சேர்ந்த பிச்சையா மகன் வேல்முருகன் (27) மற்றும் சிலர் சேர்ந்து நிறுவனத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானராஜன் மேற்படி வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 16,500 மதிப்புள்ள 11 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் ஏற்பட்ட பிரச்சனை - தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி: தூத்துக்குடியில் காங்கிரஸார் கொண்டாட்டம்!

  • Share on