• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் ஏற்பட்ட பிரச்சனை - தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முனியராஜ் (எ) அம்பர்லா (28) என்பவரும் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சங்கர் (எ) குட்டியன் (19) ஆகியோரும் மது அருந்தும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக சங்கர் (எ) குட்டியன்  கடந்த 04.08.2023 அன்று  முனியராஜ் (எ) அம்பர்லா வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முனியராஜ் (எ) அம்பர்லா நேற்று அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சங்கர் (எ) குட்டியனை கைது செய்தார்.

  • Share on

தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி அருகே காப்பர் வயர்களை திருடியவர் கைது

  • Share on