தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் "சமத்துவ பொங்கல்" விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் "சமத்துவ பொங்கல்" விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் பொருளாளர் அருண் சுரேஷ்குமார், துணை செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிரணி செயலாளர் குருவம்மாள் மற்றும் மகளிரணியினர் பொங்கலிட்டனர். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலைகள் மற்றும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், பெரியசாமி, இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், தொழிலாளரணி செயலாளர் சதாசிவம், விவசாய அணி செயலாளர் சரவணன், விவசாய அணி துணை செயலாளர் பொன்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் முத்துக்குமார், மாநகர செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், ரவிமுத்துக்குமரன், கௌரிவேல், சந்தனராஜ்,சுந்தர், பார்த்திபன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.