தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வட கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இது குறித்து மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.