தூத்துக்குடி அருகே எம்.சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் ஜெப்ரைட் ( 29 ) புதிய அனல் மின் நிலையத்தில் தனியார் மூலம் ஒப்பந்த மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
அதே போல தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் விஜய் ( 33 ) .அவரும் அதே நிலையத்தில் தனியார் மூலம் ஒப்பந்த முறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் சமூக வலைதளத்தில் பதிவிடும் பழக்கம் உள்ளவர்கள். இதில் ஜெப்ரைட் குறித்து அவதூறாக பதிவேற்றியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பணிக்கு வந்த போது அங்கேயே இருவரும் மோதிக் கொண்டனர். மோதல் குறித்து தெர்மல் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.