• vilasalnews@gmail.com

ஓய்வு பெற்ற தலைமை காவலருக்கு இறுதி அஞ்சலி

  • Share on

காவல்துறையில் ஓய்வு பெற்ற தலைமை காவலருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த திரு. பால்ராஜ் (74) இன்று (31.07.2023) அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் இன்று (31.07.2023) அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் விபத்து : ஆட்டோ டிரைவர் பலி!

விளாத்திகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

  • Share on