தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன் மகன் ஜெயக்குமார் (40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு பைக்கில் சேதுபாதை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜெயக்குமார் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த பட்டினமருதூர் திருமணி மகன் இசக்கிராஜ் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த ஜெயக்குமாருக்கு மேரி என்ற மனைவியும், சூரியா என்ற 5 வயது மகனும் உள்ளனர். அவரது மரணம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.