• vilasalnews@gmail.com

மாமனாரை செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது

  • Share on

பசுவந்தனை அருகே மாமனாரை செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பரப்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வசந்த் (34) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தின் மனைவி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கவார்நத்தம் பகுதியிலுள்ள அவரது தந்தை நாகராஜன் (58) வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (30.07.2023)  நாகராஜனின் வீட்டிற்கு வந்த வசந்த் அவரிடம் தகராறு செய்து செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து வசந்த் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் கைது!

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் விபத்து : ஆட்டோ டிரைவர் பலி!

  • Share on