• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழா : வழக்கறிஞர் ஜோயல் மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக இஞைரணி மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜோயால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர், வழக்கறிஞர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கனி மார்க்கட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் திமுக பகுதி செயலாளர் பென்னி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் பால்துரை, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோசப் அமல்ராஜ் (எ) ஏபிஆர் ஜோ,  வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரேம் ஆதித்தன், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர திமுக இளைஞரணி துணைச் செயலாளர் முகமது, மாநகர திமுக இளைஞரணி துணை செயலாளர் பிரவின், தெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நம்பி பாண்டியன், இளைஞரணி தாம்பரம் விமல், மெல்ட்டஸ், தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்ற  பொருளாளர் சேக்முகமது, மாவட்ட மன்ற துணைச் செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட மன்ற துணைத்தலைவர் நட்ராஜ், மன்ற மாவட்ட துணைத் தலைவர் திருச்செந்தூர் சுரேஷ், தூத்துக்குடி மாநகர தலைவர் தளபதி முருகன், மாநகர செயலாளர் ராஜா,  மாநகர துணை பொருளாளர் ராஜா பிரதிப், மாநகர அமைப்பாளர் விமல் ஜீ, விளாத்திகுளம் ஒன்றிய மன்ற  தலைவர் ரவி பிரகாஷ், ஓட்டப்பிடாரம் மன்ற தலைவர் சிலுவைப்பட்டி பாரி, ஓட்டப்பிடாரம் மன்ற துணைத் தலைவர் துப்பாஸ்பட்டி கார்த்தீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக 30 பேரிடம் 490 பவுன் தங்க நகைகள் மோசடி - பலே கில்லாடி 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் கைது!

  • Share on