தூத்துக்குடியில் நாளை நடைபெறவுள்ள பசுபதி பாண்டியன் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன்குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரதட்டில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் நாளை (10.01.2021) நடைபெற உள்ள 9ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துணை துணை தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (09.01.2021) மாலை தூத்துக்குடி, ஸ்ரீ அருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் செல்வன், ஈஸ்வரன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கணேசன், பிரகாஷ், வெங்கடேசன், காட்வின் ஜெகதீஸ்குமார், கலைக்கதிரவன், இளங்கோவன், சங்கர், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், சுரேஷ் குமார், ஜெயபால் பர்னபாஸ், பால்ராஜ், கல்யாண குமார், சிசில், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.