• vilasalnews@gmail.com

2 வருடங்களாக ஊதியம் வழக்கப்படவில்லை - ஆட்சியரிடம் தூய்மை பணியாளர் மனு!

  • Share on

தூத்துக்குடி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளரான எனக்கு 20 மாத காலமாக ஊதியம் வழக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் சண்முகவேல் என்பவர் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் சண்முகவேல் (54), இவர் அங்குள்ள நடராஜன் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 28 வருடமாக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆரம்பத்தில் அரசு ஊதியம் 75 ரூபாய் வாங்கிய இவர் தற்போது 1,065 ரூபாய் வாங்கி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி அலுவலகத்தில் கேட்கும் போது அரசு பணம் ஒதுக்கவில்லை என்று பள்ளி தரப்பில் கூறுகிறார்களாம். ஆகவே, தனக்கு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மை  பணியாளர் சண்முகவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

  • Share on

தூத்துக்குடியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது

தூத்துக்குடியில் பெற்றோரின் துணையின்றி தவித்த சிறுமி - மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறை!

  • Share on