• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது

  • Share on

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக  வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  அய்யப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று (09.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த சாமுவேல் மகன் சந்திர பாலன் (59) என்பதும் அவர் சட்டவிரோதமாக  வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே போலீசார் சந்திர பாலனை கைது செய்து அவரிடமிருந்த 2060 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 1,100 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

2 வருடங்களாக ஊதியம் வழக்கப்படவில்லை - ஆட்சியரிடம் தூய்மை பணியாளர் மனு!

  • Share on