• vilasalnews@gmail.com

தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • Share on

தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்  கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  பிரெட்ரிக்ராஜன், தலைமைக் காவலர்கள்  காசி, மணிகண்டன், மற்றொரு  மணிகண்டன், காவலர்கள் பிரபுபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று (06.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள ஒரு கோவில் அருகில்  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர்களான மந்திரம் மகன் கோட்டைராஜ் (எ) சுந்தரம்  (22), முருகன் மகன் விக்டர் (19), கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திருகுருங்குடி பகுதியை சேர்ந்த சேகர் மகன் கோளாறு சுந்தர் (எ) சுந்தர் (24 ) மற்றும் தூத்துக்குடி ஆவுடையார் தெருவை சேர்ந்த லிங்கம் மகன் பாலசுப்பிரமணியன் (22) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார்  கோட்டைராஜ் (எ) சுந்தரம், கோளாறு சுந்தர் (எ) சுந்தர், விக்டர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய  5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து  2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  கோட்டைராஜ் (எ) சுந்தரம் மீது ஏற்கனவே சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், தூத்துக்குடி செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி காவல் நிலையத்தில்  2 வழக்குகளும், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 7 வழக்குகளும்,

கோளாறு சுந்தர் (எ) சுந்தர் மீது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருவள்;ர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 3 வழக்குகளும், விக்டர் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,

கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், தூத்துக்குடி போதைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி இல்லை - மீண்டும் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது

  • Share on