• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் இருக்காது : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 07.07.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 

எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடியில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி இல்லை - மீண்டும் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!

  • Share on