• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

  • Share on

பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை (ஜன.10ம் தேதி) 90 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தூத்துக்குடி மாவட்டம், மேல அலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 9-வது நினைவு தினத்தை முன்னிட்டு 10.01.2021 அன்று அவ்விடத்தில் பல்வேறு வகையான தலித் இயக்கங்கள் அந்நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதன் தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் 10.01.2021 அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுவதற்கு ஆவண செய்யும்படி பார்வையில் காணும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையை ஏற்றும், 10.01.2021 அன்று பசுபதிபாண்டியன் 9-வது நினைவுத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள 90 டாஸ்மாக் மதுபானக் கடைகளை 10.01.2021 அன்று ஒருநாள் மட்டும் மூடுவதற்கு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (மதுபானக் கடை மற்றும் பார்) விதிகள் 2003இன் விதி -12(2)-ன்படி ஆணையிடப்படுகிறது.

இதன்படி 2ஆம் கேட், தட்சர் தெரு, பொன்னகரம், சேதுபதி ரோடு, வட்டக்கோவில், முத்துகிருஷ்ணாபுரம், புது பேருந்து நிலையம், ஸ்டேட் பேங் காலனி, செல்வநாயகபுரம் மெயின் ரோடு, திரவியபுரம், போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகில், அழகேசபுரம், மெயின்ரோடு, அண்ணாநகர், விஇ ரோடு, மார்க்கெட் அருகில் ஜிசி ஒரோடு, எட்டயபுரம் ரோடு, மணிநகர், பாளைரோடு, பாலவிநாயகர் கோவில்தெரு, பூமார்க்கெட் எதிரில், எஸ்எம் புரம் பிரையன்ட் நகர், சிஜிஇ காலனி, திருச்செந்தூர் மெயின்ரோடு, மையவாடி, டிஎம்பி காலனி, எப்சிஐ  ரவுண்டானா, இந்திரா நகர், சிவந்தாக்குளம் மெயின்ரோடு, முத்தையாபுரம், பாரதிநகர், தாளமுத்துநகர், வடக்கு சோட்டையன் தோப்பு, மாப்பிள்ளையூரணி டி.சவேரியார்புரம் உட்பட 90 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடியில் 50பேர் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பசுபதிபாண்டியன் நினைவு தினம் : பாதுகாப்பு பணியில் 1400 காவலர்கள்

  • Share on