• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் தொடரும் சம்பவம்!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பௌர்ணமி தினமான நேற்று கடல் நீர் சுமார் 50 அடி நீளத்திற்கு உள்வாங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி உள்ளிட்ட திதி நாட்களில் ஒரு சில தினங்கள் காலையில் கடல் நீ உள்வாங்குவதும் மதியம் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பௌர்ணமி திதி ஆரம்பமாகி நேற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து நேற்று காலை கோவில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 50 அடி நீளம் உள்வாங்கியது மதியம் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.

திடீரென கடல்நீர் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக  இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு

ஓட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது!

  • Share on