தூத்துக்குடியில் நாளை 6ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி நகர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,110/22 கே.வி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், ஜார்ஜ் ரோடு, லயன்ஸ் டவுன், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, உப்பளப் பகுதிகள், தெற்கு எம்பரர் தெரு, செயின்ட் பீட்டர் கோயில்தெரு, மணல்தெரு, பெரைரா தெரு, ஜார்ஜ் ரோடு, பாத்திமாநகர், இந்திரா நகர், தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், பிராப்பர் சந்தைரோடு, காந்தி நகர், மேல சண்முகபுரம் 2வது தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.