• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் அகற்றம்!

  • Share on

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், 'ஜிப்சம்' கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றும் பணி துவங்கியது.

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கழிவுகள் தனியார் நிறுவனம் மூலம் அகற்றப்படுகிறது. இந்நிலையில், ஜிப்சம் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றும் பணி இன்று தொடங்கியது. ஆந்திராவில் உள்ள இந்தியன் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

மேலும் 3 லாரிகளில் ஜிப்சம் கழிவுகள் விருதுநகரில் உள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. கழிவுகள் அகற்றப்படும் வரை 9 பேர் கொண்ட குழு ஆய்வுகள் மேற்கொள்ளும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் பணி, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்படும். சார் ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்காக ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படும். அங்கிருந்து 24 மணி நேரம் பணிகள் கண்காணிக்கப்படும்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு

  • Share on