• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது

  • Share on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த தேவா ஸ்டாலின் மகன் டோமினிக் வசந்த் (23) என்பவர் கடந்த 03.06.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேரு பூங்கா அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவருடைய இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.

அதேபோன்று தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த செல்வக்குமார் மகன் வெற்றிவேல் (24) என்பவர் கடந்த 18.06.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை வடபாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட முத்துநகர் பீச் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது அந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.

இதனையடுத்து திருடு போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர்  ரத்தினவேல் பாண்டியன், தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்   முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து இருசக்கர வாகனங்களை திருடியவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருச்செந்தூர் சரவண பொய்கை சாலையைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஹரிகரன் (19) மற்றும் ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்த ஓஸ்வால்ட் மகன் ஜோஸ்வின் டெரில் (19) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஹரிஹரன் மற்றும் ஜோஸ்வின் டெரில் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 1,70,000 மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் அகற்றம்!

  • Share on