தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தராஜன் மகன் லூகாஸ் மணி (40) என்பவருக்கும், தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர்களான பாஸ்கர் மகன் ஜோகிங்ஸ்டன் (25) மற்றும் சாமுவேல் (எ) மாடசாமி மகன் மதன்குமார் (எ) அப்புலூ (25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் லூகாஸ் மணி கடந்த 21.06.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஜோகிங்ஸ்டன், மதன்குமார் (எ) அப்புலூ மற்றும் தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பார்த்தீஸ் மகன் அந்தோணிராஜ் (23) ஆகியோர் சேர்ந்து லூகாஸ் மணியிடம் தகராறு செய்து தவறாக பேசி கம்பு மற்றும் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து லூகாஸ் மணி நேற்று (22.06.2023) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டேன்லி ஜான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரிகள் ஜோகிங்ஸ்டன், மதன்குமார் (எ) அப்புலூ மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட ஜோகிங்ஸ்டன் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், மதன்குமார் (எ) அப்புலூ மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 வழக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அந்தோணிராஜ் மீது தாளமுத்துநநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.