தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த செக்காரக்குடி கிராமத்தில் 27.06.2023 அன்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடைகள் வளர்ப்போருக்கான கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தல், மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல், கன்று வீச்சு நோய் தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சசல் நோய் தடுப்பூசி போடுதல். குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் நாட்டு இன கால்நடை கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இம்முகாமில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.