கனிமொழி எம்பி முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணையும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
நலம் ராஜேந்திரன் தலைமையில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 50பேர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோனிஸ்டாலின், வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர திமுக-இளைஞரணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் அல்பர்ட், பிரபாகர், பகுதி இளைஞரணி செயலாளர் ரவி, உட்பட பலர் உடன் இருந்தனர்.