• vilasalnews@gmail.com

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து போன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளாராம்.

இதனையடுத்து, அப்பெண் எஸ்ஐ சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாக பேசுகிறார் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இது பற்றி அப்பெண்ணின் கணவர் உதவி ஆய்வாளர் சுதாகரிடம் சென்று இதுபோன்று தன் மனைவியை தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டதற்கு, உன்னை கைது செய்து உள்ளே வைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணும் அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உதவி ஆய்வாளர் சுதாகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொன் நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கியில் ஒப்படைப்பு

  • Share on