• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

  • Share on

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.  

கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன் கொடுமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பிரதிநிதி ராஜகுமாரி, யூனியன் ஆணையாளர் சிவபாலன், பிடிஓ ராமராஜ், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மணல் திருட்டு வழக்கு - குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினருக்கு எதிராக எஸ்பியிடம் புகார்!

  • Share on