• vilasalnews@gmail.com

மணல் திருட்டு வழக்கு - குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே  நடைபெற்ற மணல் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டவரை  இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 24.05.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுபடுகையில் 10 மூடை ஆற்று மணல் திருடிய வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் கண்ணன் (எ) கருப்பசாமி (27) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் கண்ணன் (எ) கருப்பசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் கண்ணன் (எ) கருப்பசாமி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் கண்ணன் (எ) கருப்பசாமி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

  • Share on

எப்போதும்வென்றான் அருகே டிராக்டர் கலப்பை இயந்திரத்தை திருடியவர் கைது!

ஓட்டப்பிடாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

  • Share on