• vilasalnews@gmail.com

எப்போதும்வென்றான் அருகே டிராக்டர் கலப்பை இயந்திரத்தை திருடியவர் கைது!

  • Share on

டிராக்டரில் பொருத்தப்படும் கலப்பை இயந்திரத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் வெள்ளையம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (73) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் வைத்திருந்த டிராக்டர் கலப்பை இயந்திரம் கடந்த 16.06.2023 அன்று திருடுபோயுள்ளது.

இதுகுறித்து முருகன் நேற்று அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விளாத்திகுளம் அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் மகன் முனியசாமி (58) என்பவர் மேற்படி டிராக்டர் கலப்பை இயந்திரத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் த செந்தில்வேல் முருகன், முனியசாமியை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 39,000 மதிப்புள்ள கலப்பை இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடியில் 53க்கு 53... காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

மணல் திருட்டு வழக்கு - குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

  • Share on