• vilasalnews@gmail.com

பாழாய்ப்போன இதற்கு விமோசனம் எப்போதோ?

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள சக்கம்மாள்புரம் கிராமத்தில் மருதாணிக்குட்டம் குளம் உள்ளது.


இந்த குளத்தில் ஊராட்சி ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட இரும்பிலான நீர் வழித்தட தடுப்பு கதவு ( ஷட்டர் - Shutter) பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. அதை சீரமைத்திட 2020ம் ஆண்டில் இருந்தே அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு உறுப்பினர் குணபாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து வருவதாகவும், தற்போது வரை அவை சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தற்போது நீர் வழித்தட தடுப்பு கதவானது ( ஷட்டர் - Shutter) உடைந்து கீழே விழுந்து பயனற்று கிடக்கிறது. ஆகவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தடுப்பு கதவு அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனியும் கால தாமதம் ஏற்படுமானால் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  • Share on

தூத்துக்குடியில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்!

தூத்துக்குடியில் 53க்கு 53... காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

  • Share on