திமுக ஆட்சியின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக பகுதி செயலாளரும், தூத்துக்குடி மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்த கபரியேல்ராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு திமுக அரசன் சாதனைகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, வைதேகி, வட்டச் செயலாளர் டி.கே.எஸ்.ரமேஷ், துரை, துணை அமைப்பாளர்கள் செல்வின், முத்துராமன், அருண்சுந்தர், சங்கரநாராயணன், தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, துணை அமைப்பாளர் மணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, ராஜா, முனியசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், மகளிர் அணி சத்யா, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.