• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் அருகே பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் நிராகரிப்பு ஏன்? வருவாய் கோட்டாட்சியர் சொல்வது இது தான்!

  • Share on

திருச்செந்தூர் வருவாய் கோட்டத்தில் இந்து காட்டு நாயக்கன் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் தொடர்பான திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை என்பவரது மனைவி சரஸ்வதி என்பவர் தனது குழந்தைகள் பூவலிங்கம், முத்துசெல்வி ஆகியோருக்கு இந்து காட்டு நாயக்கன் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

மனுதாார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கொடிவழி ஜாபிதா மற்றும் நேரடி விசாரணையில் குருசாமி - காளியம்மாள் தம்பதிகளின் வாரிசுகள் குறித்து மனுதாரர் மற்றும் அவரது தரப்பில் விசாரணையில் ஆஜரான நபர்களால் தெளிவுப்படுத்தப் படவில்லை என்பதாலும், மனுதாரர் குடி, நிலவரம் பற்றிய நிலை, குலமரபு, பேச்சு வழக்கு, இறை வழிபாடு, அறிவார்ந்த செயல், பாரம்பரிய கட்டுப்பாட்டு முறை, உறவினர்களின் நிலை குறித்து ஆய்வு செய்தபோது மனுதாரர் பழங்குடியினத்தவரான இந்து காட்டு நாயக்கன் சாதியைச் சார்ந்தவர் என்பதற்கான எவ்வித அடையாளங்களும் இல்லையென்பதாலும்,

மனுதாரர் சரஸ்வதி, சின்னத்துரை என்பவர் தனது குழந்தைகளான பூவலிங்கம், முத்துசெல்வி ஆகியோருக்கு பழங்குடியினர் சாதிச்சான்றான இந்து காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்கிட மார்க்கமில்லை என ஏற்கனவே கடந்த 23.05.2023 அன்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி  தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியிலிருந்து பணி மாறுதலாகி செல்லும் காவல் அதிகாரிக்கு எஸ்பி வாழ்த்து!

தூத்துக்குடியில் வேலையில்லாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்

  • Share on