• vilasalnews@gmail.com

தூத்துக்குடியிலிருந்து பணி மாறுதலாகி செல்லும் காவல் அதிகாரிக்கு எஸ்பி வாழ்த்து!

  • Share on

தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு பணி மாறுதலில் செல்வதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பிரகாஷ் பாபு, சென்னை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  பிரகாஷ் பாபு இன்று (06.06.2023) மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவருக்கு மென்மேலும் பல பதவி உயர்வுகள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியான வியாபாரிக்கு மாநகராட்சி இழப்பீடு வழங்க வேண்டும் - மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வலியுறுத்தல்!

திருச்செந்தூர் அருகே பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் நிராகரிப்பு ஏன்? வருவாய் கோட்டாட்சியர் சொல்வது இது தான்!

  • Share on