• vilasalnews@gmail.com

பெரியசாமி 6ஆம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மரியாதை

  • Share on

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஜசன்சில்வா, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பிரபாகரன், தனபால் ராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல், நாராயணசாமி, காமாட்சி தனபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் காங்கிரஸ் எடிசன், வடக்கு மாவட்ட ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க செயலாளர் ஜோசுவா, வார்டு தலைவர்கள் மகேந்திரன், தாமஸ், அருண், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின், ரஞ்சிதம் ஜெபராஜ் ,பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் 71 கோடியில் நிறைவு பெற்ற திட்ட பணிகள் - அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியான வியாபாரிக்கு மாநகராட்சி இழப்பீடு வழங்க வேண்டும் - மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வலியுறுத்தல்!

  • Share on