முத்தையாபுரம் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் மாட்டு வண்டி பந்தயம் முத்தையாபுரம் பல்க் ஸ்டாபில் நடைபெற்றது.
இந்திய விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாளை முன்னிட்டு, முத்தையாபுரம் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பாக மாபெரும் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று ( 8.01.2021 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இதில் 9 பொிய மாட்டு வண்டி, 17 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு ஓடின. இரண்டு போட்டியிலும் முதல் பாிசுகளை அமைச்சா் கடம்பூா் ரஜூவின் மாட்டு வண்டிகள் பெற்றன.
பின்னா் அமைச்சா் கடம்பூா்ராஜூ செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா் அப்போது அவா் கூறியதாவது :
முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு மக்களை பாதுகாத்துள்ளது.
தொடா் நடவடிக்கையின் காரணமாக நோய் தொற்று குறைந்து வந்துள்ளதை அடுத்து படிப்படியாக தளா்வுகள் அமுல் படுத்தப்பட்டது. அந்த வகையில் திரைப்பட தயாாிப்பு துறையினா் வாழ்வாதாரம் கருதி முதலில்
உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடா்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் பின்னா் படிபடியாக படபிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பல மாநிலங்களில் முழு அளவிலான அனுமதி அளித்த பேதும் நாம் வழங்காமல் இருந்தோம். நவம்பா் 10 முதல் 50 சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பெருமளவு தொற்று குறைத்து வருகிற நிலையில் பண்டிகை காலம் வருவதால் படம் பாா்க்க விரும்பும் மக்கள் மற்றும் மாஸ்டா் படம் உட்பட திரைப்படத் துறையினா் வாழ்வாதாரம் கருதி நூறு சதவீதம் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு பாிசீலித்து முடிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
பெள்ளாட்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான். இதில் சம்மநதபட்ட அதிமுகவை சேந்தவா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பாரபட்ச மற்ற முறையில் நடவடிக்கை எடுத்துள்ளாா். இதில் கனிமொழி அரசியல் செய்ய வேண்டாம்.
ஆனால், அவா்கள் கோயம்புத்தூாில் கிராம சபை என்ற பெயாில் கட்சி கூட்டம் நடத்தி அதில் கேள்வி கேட்ட பெண்ணை திமுக தலைவா் ஸ்டாலினே வெளியேற்ற சொல்கிறாா். அந்த பெண்னை காவல்துறை அழைத்து சென்றபேது திமுகவினா் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டதற்காக அந்த பெண்ணை வழி மறித்து பானபங்கம் செய்யும் வகையில் தாக்குகின்றனா் இதுதான் திமுக பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா இந்த இரட்டை வேடம் குறித்து கனிமொழி பேசட்டும் என தெரிவித்தார்.