• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சியில் 71 கோடியில் நிறைவு பெற்ற திட்ட பணிகள் - அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் 71 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு இன்று திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில், 10.24 கோடி மதிப்பீட்டில் ஜெயராஜ் சாலையில் பல் அடுக்கு வாகன நிறுத்தம், 7.04 கோடி மதிப்பீட்டில் டி.எம்.பி காலனிப்பகுதியில் சலவை கூடம், 23.29 கோடி மதிப்பீட்டில் திறவிடப் பகுதிகளில் 8 பூங்காக்கள் (செல்சீனி காலனி, கிருபை நகர், முருகேசன் நகர், கதிர்வேல் நகர்,ஓம் சாந்தி நகர், காந்தி நகர்), 2.0 கோடி மதிப்பீட்டில் காந்தி நகர் திறவிடப் பகுதிகளில் (4 எண்ணம்) பூங்கா மற்றும் கதிர்வேல் நகர் பகுதியில் வள மீட்பு மையம், 1.40 கோடி மதிப்பீட்டில் சிவந்தாகுளம் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சென்சுரி பூங்கா, 2.0 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் உள்ள பழமை வாய்ந்த கட்டங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி (தெற்கு புதுத் தெரு), 11.77 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம்

9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கான சீர்மிகு பணிமனை, 3.50 கோடி மதிப்பீட்டில் புல்தோட்டம், கோபால்சாமி தெரு பழைய அலுவலக வளாகம், சில்வர் புரம், அத்திமரப்பட்டி, சிவந்தாகுளம், டூவிபுரம், கதிர்வேல் நகர், முத்தையாபுரம், கே.டி.சி.நகர், சங்குளிகாலணி, அலங்காரத்தட்டு, பண்டாரம் பட்டி, செல்சீனி காலனி ஆகிய பகுதிகளில் நகர்புற நல்வாழ்வு மையங்கள், 0.22 கோடி மதிப்பீட்டில் மடத்தூர் பகுதியில் பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.

முன்னதாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் அதிகாரியுடன் அமைச்சர் கே என் நேரு ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், எம்எல்ஏக்கள் மார்கண்டேயன், சண்முகையா, மாநகராட்சி ஆணையர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ

பெரியசாமி 6ஆம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மரியாதை

  • Share on