பெரியதாழை தர்மர் தெருவை சேர்ந்தவர் லோகு மகன் ரேக் சிங்கர்(18) மற்றும் அவருடைய தாயார் சரோஜா(50) ஆகிய இருவரும் ஒரு பைக்கிலும், பெரியதாழை சவேரியார் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் மெர்லின்(41) அவரது மனைவி அட்டிலினா(35), மகன்கள் ஆலோன்(9), ஆலன்(7) ஆகிய நான்கு பேர் ஒரு பைக்கிலும் திருச்செந்தூர் நோக்கி சென்றுள்ளனர்.
மணப்பாடு – பெரியதாழை ரோட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இரண்டு பைக்கின் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சரோஜா(50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேக்சிங்கர் மற்றொரு பைக்கில் வந்த அட்டிலினா(35), மெர்லின்(41) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதிச் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர்களை பெரியதாழை பங்கு தந்தை சுசீலன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து, மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் நிலையை விசாரித்த எம்.எல்.ஏ, சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களுடன் எம்.எல்.ஏ உதவியாளர் சந்திரபோஸ், ஊர்ப்பெரியவர்கள் அந்தோணி, லிபொன்ஸ் அமலதாஸ், மானில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட கமிட்டி ஜெனி உள்பட பலர் பங்கேற்றனர்.