தூத்துக்குடியில் ரூ.515.72 கோடி மதிப்பீலான கூட்டு குடிநீர் (ஜல் ஜீவன் மிஷன்) திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சார்ந்த 363 கிராம குடியிருப்புகளுக்கான ரூ.515.72 கோடி மதிப்பீலான கூட்டு குடிநீர் (ஜல் ஜீவன் மிஷன்) திட்ட அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு திட்ட அடிக்கல் நாட்டினார்.
இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.